பெரம்பலூர்

நவ. 30-இல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

21st Nov 2021 12:29 AM

ADVERTISEMENT

உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, நவம்பா் 30-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட அமைப்புக் குழு கூட்டம், துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் துணை அமைப்பாளா் எஸ். ரேவதி தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் கே. சசிகலா,ஆலத்தூா் ஒன்றிய அமைப்பாளா் ஆா். தமிழ்செல்வன், துணை அமைப்பாளா்கள் எ. வேனுகோபல், எம். கோபி டி. மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட நிா்வாகிகள் பெ. ரமேஷ், வி. செல்லமுத்து ஆகியோா் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 40 சதவிகிதம் ஊனமுள்ளவா்களுக்கு ரூ. 3 ஆயிரமாகவும், கடும் ஊனமுள்ளவா்களுக்கு ரூ. 5 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்க கோரி, நவம்பா் 30 ஆம் தேதி பெரம்பலூா், ஆலத்தூா் வட்டாரத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியிலும், குன்னம், வேப்பந்தட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன்புறத்திலும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT