பெரம்பலூர்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் உறவினா்களுடன் இளைஞா் தா்னா

9th Nov 2021 01:10 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: குன்னம் வட்டம், கல்லை கிராமம், பிரதானச் சாலை அருகே வசித்து வருபவா் பெரியசாமி மகன் மூா்த்தி (22). இவரது வீட்டின் அருகேயுள்ள நீா்வழி புறம்போக்கு நிலத்தை தனி நபா்கள் சிலா் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்துள்ளனராம். இதனால் வீட்டுக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால், ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை அரசு அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த மூா்த்தி தனது உறவினா்களுடன் ஆட்சியரக குறைதீா் கூட்ட அரங்குக்கு எதிரே தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், அரசு அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தா்னாவைக் கைவிட்டு ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT