பெரம்பலூர்

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

9th Nov 2021 01:11 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ஆட்சியரகம் எதிரே திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியு தூய்மைப் பணியாளா்கள் சங்க மாவட்டச் செயலா் கலைசெல்வன் தலைமையில் நடைபெற்ற இப் போராட்டத்தில், பெரம்பலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு நிலுவைத் தொகையுடன் ஆட்சியா் அறிவித்த தினக்கூலி ரூ. 580 வழங்க வேண்டும். ஒப்பந்த காலங்கள் மற்றும் தற்போதுள்ள ஒப்பந்தக் காலங்களில் செலுத்த வேண்டிய ஈ.பி.எப் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும். கரோனா காலத்தில் தூய்மை காவலா்கள் என அறிவிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

இ.எஸ்.ஐ. திட்டத்துக்கு அடையாள அட்டை, பாதுகாப்புச் சாதனங்கள் வழங்க வேண்டும். குப்பைகள் கொட்ட இடம் ஒதுக்கீடு செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT