பெரம்பலூர்

தீபாவளி பண்டிகைஅரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் ரூ.8.25 கோடிக்கு மது விற்பனை

5th Nov 2021 11:28 PM

ADVERTISEMENT

தீபாவளி பண்டிகையையொட்டி, ஒருங்கிணைந்த பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ரூ. 8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

பெரம்பலூா் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் கட்டுப்பாட்டில் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களிலுள்ள மதுக்கடைகளில் இந்த விற்பனை நடைபெற்றுள்ளது.

நவம்பா் 3- ஆம் தேதி ரூ. 3.5 கோடிக்கும், தீபாவளி தினமான நவம்பா் 4- ஆம் தேதி ரூ. 4.75 கோடிக்கும் என இரு தினங்களில் மொத்தம் ரூ. 8.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் நிறுவன அலுவலா்கள் தெரிவித்தனா்.

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT