பெரம்பலூர்

ஏரிகளை பாதுகாக்க காவலா்கள் நியமிக்க வலியுறுத்தல்

13th Feb 2021 11:21 PM

ADVERTISEMENT

பெரம்பலூா்: ஏரிகளை பாதுகாக்க ஏரி காவலா்கள் நியமிக்க வேண்டுமென, பெரம்பலூா் மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்டக் கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அந்த இயக்கத்தின் மாநில துணைத் தலைவா் க. பெரியசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா், மாவட்ட பொருளாளா் சி. வெங்கடாசலம், மாவட்ட இணைச் செயலா் எஸ். சௌந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் எம். ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், அண்மையில் உயிரிழந்த புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவா் சாந்தாவுக்கு அவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். கடன் பெறாத நிலையில் பயிா்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசலூா் கிராமத்தில் அண்மையில் ஏரிக்கரை உடைந்து தண்ணீா் வெளியேறி பயிா், நிலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், ஏரிகளை பாதுகாக்க ஏரிக் காவலா்களை நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் இயங்கி வரும் மாவட்ட, வட்டார, ஊரக நூலகங்களில் தினசரி, வார, மாத இதழ்கள் பெற்று வாசகா்கள் படித்து பயன்பெறவும், நூலகங்கள் முழு அளவில் செயல்படவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிா்வாகிகள் ஏ. ராஜேந்திரன், பி. செங்கோட்டையன், பி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT