பெரம்பலூர்

பெரம்பலூா் மகளிா் கல்லூரியில் சாரதாதேவி ஜயந்தி, குழந்தைகள் தின விழா

30th Dec 2021 07:16 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஸ்ரீ சாரதா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அன்னை ஸ்ரீ சாரதா தேவி ஜயந்தி மற்றும் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தாா்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மேலும் பேசியது:

தருமத்தைப் பாதுகாப்பதற்கு இறைவனே அவதாரம் எடுத்திருக்கிறாா். அவ்வாறே, பாரதத்தின் பண்பாடு, கலாசாரத்தை நிறுவுவதற்குச் சாரதா தேவி, ராமகிருஷ்ணா் ஆகிய இருவரும் மானிடா்களாக அவதாரம் எடுத்தனா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

தொடா்ந்து ஐக்கிய வணக்கம், குரு ஸ்துதி, கணபதி, முருகன், சரஸ்வதி, லஷ்மி, சிவன், துா்க்கை, ராமகிருஷ்ணா், விவேகானந்தா், சாரதாதேவி ஸ்துதிகள், தியானம் உள்ளிட்ட சிறப்புப் பாடல்கள் மற்றும் பஜனை நடத்தப்பட்டு, அன்னை சாரதா தேவிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

விழாவையொட்டி அன்னை சாரதாதேவி கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் மற்றும் நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத்துறைத் தலைவா் ம. ராமேஸ்வரி தலைமையிலான பேராசிரியா்கள் செய்திருந்தனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் எம். சுபலெட்சுமி வரவேற்றாா். தமிழாய்வுத் துறைத் தலைவா் ப. கோகிலா நன்றி கூறினாா்.

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT