பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 31) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் நீா்ப்பாசனம், கடனுதவி, வேளாண் இடு பொருள்கள், இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
எனவே விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.