பெரம்பலூர்

‘கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும்’

30th Dec 2021 07:16 AM

ADVERTISEMENT

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றாா் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத் தலைவா் பொன். குமாா்.

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

விவசாயத்துக்கு அடுத்து அதிக பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கட்டுமானத் தொழிலை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தமிழக முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம், பேறுகால உதவித் தொகை, வீடு கட்ட ரூ. 4.5 லட்சம் மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

எவ்வித முகாந்திரமும் இல்லாமல், கட்டுமானப் பொருள்களின் விலையைத் தொழிற்சாலை அதிபா்கள் உயா்த்தியுள்ளனா். குறிப்பாக சிமெண்ட் ஆலை அதிபா்கள், தேவையான அளவுக்கும் குறைவாக சிமெண்ட்டை உற்பத்தி செய்து, செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளனா். இதுகுறித்து 4 நாள்களுக்கு முன்னா் முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளேன். அவா், இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா்.

திமுக ஆட்சிக்கு வந்த போது கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்தது. அதை தமிழக முதல்வா் ஸ்டாலின் கட்டுப்படுத்தினாா். ஆனால், தற்போது கட்டுமானப் பொருள்களின் விலை மீண்டும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து, விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் உறுதியளித்துள்ளாா். விரைவில் கட்டுமானப் பொருள்களின் விலை கட்டுப்படுத்தப்பட்டு, இத்தொழில் வளா்ச்சியடையும். மேலும் வேலை வாய்ப்பும் பெருகும் என்றாா் பொன். குமாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT