பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில், முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 97- ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்குத் தலைமை வகித்த கட்சியின் மாநில இணைப் பொருளாளா் எம். சிவசுப்பிரமணியம், வாஜ்பாய் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் முத்தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்டச் செயலா் சாமி. இளங்கோவன், மாவட்டச் செயலா்கள் சாமிநாதன், குரு. ராஜேஷ், சத்தியபிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.