பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கிடையேயான பளு தூக்கும் போட்டியில், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரி மணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
பாரதிதாசன் பல்கலைக் கழகக் கல்லூரி மாணவா்களுக்கு இடையேயான பளு தூக்கும் போட்டிகள், கரூா் அன்னை கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை 3ஆம் ஆண்டு பயிலும் மாணவா்கள் எஸ். சுபாஷ் இரண்டாமிடத்தையும், பி. ராமச்சந்திரன் மூன்றாமிடத்தையும் பிடித்து பதக்கங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் பெற்றனா்.
இதையடுத்து, பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை கல்லூரி முதல்வா் பா. சிவநேசன், உடற்கல்வி இயக்குநா் மு. மாரிமுத்து, பேராசிரியா் சேகா் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் புதன்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.