பெரம்பலூா் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப்பணித் தோ்வுக்கு ஆயத்த பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்கள், இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் பங்கேற்க, அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையத்துடன் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணைந்து, ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்களை தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு தோ்வுக்கான ஆயத்தப் பயிற்சி அளித்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோா் இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மீன்வள ஆய்வாளா் அலுவலகம், எஸ்.கே.சி. காம்ப்ளக்ஸ், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.