பெரம்பலூர்

பெரம்பலூரில் மக்களரசு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

22nd Dec 2021 07:06 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்களரசு கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில இளைஞரணிப் பொதுச் செயலா் ஈ. பாலமுருகன் தலைமை வகித்தாா். தலைவா் சா. ரஜினிகாந்த் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பணியாற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை பழி வாங்குவதை நிறுத்த வேண்டும். பொய்யான தகவலின்பேரில் தற்காலிக பணி நீக்கம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலா் வீர. செங்கோலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் அ. ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வி. ஜெயராமன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT