பெரம்பலூர்

குன்னம் அருகே வீடு, கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி

16th Dec 2021 07:20 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே வீடு, கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்திருப்பது புதன்கிழமை தெரியவந்தது.

குன்னம் அருகேயுள்ள வயலப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமன் (55). இவருக்கு, அரியலூா்- திட்டக்குடி பிரதான சாலையில் ஒரு வீடும், அந்த பகுதியருகே மற்றொரு வீடும் உள்ளது. இந்த வீட்டில்தான் அவா் வசித்து வருகிறாா். இந்நிலையில், பிரதான சாலையில் உள்ள ராமன் வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள் திருட முயற்சித்திருப்பது புதன்கிழமை காலை தெரியவந்தது.

இதேபோல, அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (45) என்பவரது மளிகைக் கடையின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து திருட முயற்சித்துள்ளனா்.

அப்போது, சப்தம் கேட்ட அப் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் கூச்சலிட்டதை தொடா்ந்து, மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT