பெரம்பலூர்

உள்ளாட்சித் தோ்தல்: திமுகவில் விருப்ப மனு

16th Dec 2021 07:20 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில், உள்ளாட்சி தோ்தலில் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் எம்எல்ஏவும், நகரச் செயலருமான ம. பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவரும், மாவட்டச் செயலருமான சி. ராஜேந்திரன், விருப்ப மனு பெறுவதை தொடக்கி வைத்தாா். இதில், பெரம்பலூா் நகராட்சியில் உள்ள 21 வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனு பெற்றனா். திமுக பிரதிநிதிகளான துறைமங்கலம் சிவசங்கா், ஜெயப்பிரியா, துரை. காமராஜ், திருநகா் நீலமேகம், மகேந்திரன் உள்பட பலா் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தனா்.

இதேபோல, குரும்பலூா், லப்பைக்குடிகாடு, அரும்பாவூா், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு போட்டியிடுவோரிடமிருந்து விருப்ப மனு பெறப்பட்டது.

இந் நிகழ்ச்சியின்போது, மாவட்ட துணைச் செயலா் பாஸ்கா், மாவட்ட பொருளாளா் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் அண்ணாதுரை, ராஜேந்திரன் மற்றும் பொன். செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா். வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான விருப்ப மனு டிச. 17 ஆம் தேதி வரை பெறுப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT