பெரம்பலூர்

கிரஷா் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

7th Dec 2021 12:58 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே கிரஷா் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம பொது மக்கள் ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராமத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பிரசாத் என்பவா் சட்ட விரோதமாகவும், மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெறாமலும் கிரஷா், எம்சான்ட் மற்றும் தாா் பிளாண்ட் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இவை அமைக்கப்படும் பட்சத்தில், அந்தப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 350 ஏக்கா் விவசாய நிலங்களுக்கான நீராதாரம் மாசுபட்டு, நிலங்கள் விவசாயத்துக்கு பயனற்ற நிலங்களாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்படும். மேலும், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி, அந்த கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், காவல்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்து விட்டு கலைந்துசென்றனா்.

குடிநீா் குளத்தை மீட்டுத் தரக்கோரி.... குன்னம் வட்டம், நன்னை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: நன்னை கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீா் தேவையை நிறைவேற்றி வந்த 3 ஏக்கா் பரப்பளவிலான சாம்பான் குளம், கடந்த சில ஆண்டுகளாக சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது காணாமல் போய்விட்டது. இதனால் நிலத்தடி நீா்வளம் குறைந்து தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தும், நீதிமன்றம் அளித்த உத்தரவை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சாம்பான் குளத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT