பெரம்பலூர்

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 438 மனுக்கள்

7th Dec 2021 12:58 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 438 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, குறித்த காலத்துக்குள் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதில் அளிக்குமாறு அறிவுறுத்தினாா். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 438 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் ம. பாரதிதாசன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT