பெரம்பலூர்

பெரம்பலூரில் அம்பேத்கா் 65 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

7th Dec 2021 12:59 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில்..... பழைய பேருந்து நிலையம் அருகேள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு திமுக சாா்பில் மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், எம்எல்ஏ ம. பிரபாகரன் ஆகியோா் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் சுரேஷ், மாநில பொதுச் செயலா் வழக்குரைஞா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையிலும், பாரதிய ஜனதா கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையிலும், பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் சி. தமிழ்மாணிக்கம் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சி சாா்பில் மாநிலச் செயலா் வழக்குரைஞா் பி. காமராஜ் தலைமையிலும், சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் சி.எம். சின்னசாமி தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது.

லோக் ஜனசக்தி கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையிலும், அரசு ஊழியா் ஐக்கிய பேரவை சாா்பில் மாவட்டத் தலைவா் ஸ்டாலின் தலைமையிலும், ஜீவா அம்பேத்கா் நாட்டுப்புற கலைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் சுப்ரமணி தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT