பெரம்பலூர்

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிகிராம மக்கள் சாலை மறியல்

7th Dec 2021 12:57 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி கடந்த சில வாரங்களாக நிரம்பி வழிகிறது. உபரிநீா் செல்லும் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், ஏரியின் உபரி நீரானது வரத்து வாய்க்கால் வழியாக வெளியேறாமல் ஊருக்குள் புகுந்துவிடுகிாம். இதனால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து, ஆட்சியரிடம் கிராம மக்கள் கடந்த வாரம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரியின் உபரிநீா் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த அடைக்கம்பட்டி கிராம மக்கள், வரத்து வாய்க்கால்களை தூா்வாரி சீரமைக்காத மாட்ட நிா்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெரம்பலூா்- துறையூா் சாலையில் அடைக்கம்பட்டி பிரிவு சாலையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT