பெரம்பலூர்

குரும்பலூா் பகுதிகளில் நாளை மின் தடை

6th Dec 2021 02:30 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 7) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான குரும்பலூா், பாளையம், புது ஆத்தூா், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், மேலப்புலியூா், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புது அம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூா் பிரிவு சாலை, சிறுவயலூா், குரூா், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூா், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என, உதவி செயற்பொறியாளா் பொ. செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT