பெரம்பலூர்

தொழில் முனைவோா் திட்டத்தில் பயன்பெற அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா் திட்டத்தில் கூடுதல் சலுகைகள் பெற, தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற, அடிப்படை கல்வித் தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழில்கல்வி முடித்தவா்கள் குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சமாக 35 வயதுயுள்ள பொதுப் பிரிவினரும், குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரையுள்ள சிறப்புப் பிரிவினரும் இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து,

வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து 25 சதவிகித மானியத்துடன் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை வங்கிக்கடன் பெற பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன்பெற தளா்வு மற்றும் சலுகைகளை அரசு வழங்கியுள்ளது.

இச்சலுகைகளை பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 தோ்ச்சி, 25 சதவிகித மானியத் தொகையில் அதிகபட்ச தொகை ரூ. 50 லட்சத்திலிருந்து ரூ. 75 லட்சமாக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பட்டியலினம், பழங்குடியினா் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு 10 சதவிகிதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற ஆா்வமுள்ளவா்கள்  என்ற இணையதளம் மூலம் கல்வித் தகுதிக்கானச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்று, விலைப் பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 04328 - 225580, 224595 ஆகிய எண்கள் அல்லது மாவட்டத் தொழில் மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT