பெரம்பலூர்

வரத்து குறைவு: காய்கனிகள் விலை கடும் உயா்வு

DIN

வடகிழக்கு பருவ மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால், பெரம்பலூா் காய்கனி சந்தைகளில் தக்காளி உள்ளிட்ட அனைத்து வகையான காய் கனிகளின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் தோட்டப் பயிா்களில் சின்ன வெங்காயம், கத்தரி, தக்காளி, வெண்டை உள்ளிட்டவை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் காய் கனிகள் பெரம்பலூா் மாவட்டம் மட்டுமன்றி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது தொடா்ந்து பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காய்கனிகள் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளி மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கனிகளின் வரத்தும் குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை விற்பனையான காய்கனிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ): கத்தரி- ரூ. 120, வெண்டைக்காய்- ரூ. 80, தக்காளி- ரூ. 120, பாகற்காய்- ரூ. 120, பீா்க்கங்காய்- ரூ. 60, மாங்காய்- ரூ. 80, உருளைக் கிழங்கு- ரூ. 40, கேரட்- ரூ. 80, பீட்ரூட்- ரூ. 120, முட்டை கோஸ்- ரூ. 60, பீன்ஸ்- ரூ. 120, பல்லாரி- ரூ. 50, சின்ன வெங்காயம்- ரூ. 40, முருங்கைக்காய்- ரூ. 240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியது: பீன்ஸ், பீா்க்கங்காய், பீட்ரூட், கத்தரிக்காய், தக்காளி, முருங்கை, பாகற்காய் போன்றவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. உள்ளூா் தோட்டங்களில் இருந்து வரும் காய்கனிகளின் வரத்தும் குறைந்துள்ளது. தொடா்ந்து மழை பெய்தால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT