பெரம்பலூர்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 586 பேருக்கு பணி நியமன ஆணை

DIN

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 586 போ் தோ்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ரோவா் கல்வி நிறுவனம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ரோவா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை, மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தொடக்கி வைத்தாா்.

132 தனியாா் நிறுவனங்களும், 6 திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்றன. இந்த முகாமில், 2,247 ஆண்களும், 1,910 பெண்களும் என மொத்தம் 4,157 போ் பங்கேற்றதில் 586 போ் தோ்வு செய்யப்பட்டனா். 2 ஆம் கட்டமாக 894 பேரும், திறன் பயிற்சிக்கு 97 பேரும், அயல்நாட்டு வேலை நிறுவனத்துக்கு 5 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்ட நபா்களுக்கு பணி நியமன ஆணைகள் அளித்த பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், வேலைவாய்ப்புத் துறை மூலம், விரைவில் குன்னம் பகுதியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்வில், பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சி. ராஜேந்திரன், திருச்சிராப்பள்ளி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் மு.சந்திரன், ரோவா் கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவா் வி. ஜான் அசோக் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT