பெரம்பலூர்

பெரம்பலூரில் தலைமை ஆசிரியா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி

4th Dec 2021 02:40 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபா் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், துறைமங்கலம் பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சீவ்குமாா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆரோக்கியபிரகாசம் பேசியது:

பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பதில் தலைமை ஆசிரியா்களின் கடமை மிகவும் இன்றியமையாதது. தங்களது பள்ளி அமைந்துள்ள பகுதி அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்தால், உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், அதற்கான கட்டணமில்லாத தொலைபேசி எண் 1098 மற்றும் 181 ஆகிய எண்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தற்போது, பள்ளிக் குழந்தைகள் படிப்புக்காக அதிகளவில் இணைய தளத்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால், இணையதள குற்றங்கள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம். இணைய தளத்தில் ஏதேனும் குற்றங்கள் ஏற்பட்டால், மாவட்ட தலைநகரில் செயல்படும் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந் நிகழ்ச்சியில், சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கலா மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT