பெரம்பலூர்

உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு

4th Dec 2021 02:41 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் மூலம் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

பின்னா், கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறையைச் சோ்ந்த பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், எச்.ஐ. வி நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கக் கூடிய ஊட்டச்சத்துமிக்க உணவுப் பொருள்கள், வேட்டி, சேலை மற்றும் துண்டு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு திட்ட மேலாளா் சு. சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT