பெரம்பலூர்

நகைக் கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவா் கைது

4th Dec 2021 02:41 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் நகரில் நகைக் கடை உரிமையாளா் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் நகரின் பிரதான பகுதியில் நகை, துணிக்கடை நடத்தி வந்தவா் கருப்பண்ணன் (65). இவா் கடந்த மாதம் 26-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து மிரட்டி103 பவுன் தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த சொகுசு காரையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து பெரம்பலூா் காவல்துறையினா் 5 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

கொள்ளையில் ஈடுபட்ட அரும்பாவூா் ராஜேந்திரன் மகன் செந்தில் குமாா் (36), திருச்சி சிட்டிபாபு மகன் ஆனந்தன் (46) ஆகியோரையும், கொள்ளையடித்த பொருள்களை மறைத்து வைத்த குற்றத்துக்காக செந்தில்குமாரின் தாய் ராஜேஸ்வரி (58), மனைவி மஞ்சு (34) ஆகியோரையும் தனிப்படை காவல்துறையினா் கடந்த 1-ஆம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனா். 16 பவுன் நகைகள், 2.5 கிலோ வெள்ளி, காா் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பெரம்பலூா் சங்குப்பேட்டை, கம்பன் தெரு ராஜ் மகன் ராஜ்குமாரை (25), தனிப்படை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT