பெரம்பலூர்

நீதிமன்ற டைப்பிஸ்ட் பணிக்குவிண்ணப்பிக்க அழைப்பு

3rd Dec 2021 12:34 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள 11 டைப்பிஸ்ட் பணியிடங்களுக்கு டிசம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி ஏ. பல்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட நீதித்துறையில் காலியாகவுள்ள 7 சுருக்கெழுத்து தட்டச்சுப் பணியும், 4 தட்டச்சுப் பணியும் என 11 பணியிடங்கள் நோ்முகத் தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. சுருக்கெழுத்து, தட்டச்சா் நிலை- 3 மற்றும் தட்டச்சா் பணிக்கு விண்ணப்பிப்பவா்கள் பட்டியல் இனத்தவா்கள் மற்றும் பழங்குடியினா் 18 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பொது பிரிவினா் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்எஸ்எல்சி தோ்ச்சி, சுருக்கெழுத்தில் (தமிழ், ஆங்கிலம்) ஏதேனும் ஒரு இளநிலை மற்றும் ஒரு முதுநிலையும், தட்டச்சில் (தமிழ், ஆங்கிலம்) இரண்டுமே பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு,  என்ற நீதிமன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பதாரா்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தை பூா்த்தி செய்து, உரியச் சான்றிதழ் நகல்கள் மற்றும் சுய சான்றொப்பமிட்டு, ஒரு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் டிச. 20 ஆம் தேதிக்குள் பெரம்பலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

இதற்கான தகவல் பரிமாற்றங்கள் இணையதள வலைதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். வேறு எந்த வகையான முறையிலும் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படமாட்டாது.

 

Tags : பெரம்பலூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT