பெரம்பலூர்

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

1st Dec 2021 02:19 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே காணாமல் போன மூதாட்டி, செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள பாளையம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. நல்லம்மாள் (80). இவரது கணவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வந்தாா்.

கடந்த 28 ஆம் தேதி முதல் நல்லம்மாளைக் காண வில்லையாம். இந்நிலையில், குரும்பலூா் பெரிய ஏரிக்குச் செல்லும் ஓடையில் நல்லம்மாள் உயிரிழந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினா் மூலம் அவரது உடலை மீட்டு, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது. பெரம்பலூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT