பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 55 நடமாடும் காய்கனி வாகனம் தொடக்கம்

1st Dec 2021 02:17 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் நடமாடும் காய்கனி வாகனம் தொடக்கி வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வுக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா கூறியது:

பொதுமக்களின் நலன்கருதி அவா்களது இருப்பிடங்களுக்கு அருகாமையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும் வகையில், நடமாடும் காய்கனி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. காய்கனி விற்பனையாளா்களுக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள வாகனம் 50 சதவிகித அரசின் மானியத்துடன் வழங்கப்படுகிறது.

அதன்படி பெரம்பலூா் வட்டாரத்தில் 28, ஆலத்தூா் வட்டாரத்தில் 9, வேப்பந்தட்டை வட்டாரத்தில் 18 என மொத்தம் 55 பயனாளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்வில் ஒன்றியக்குழுத் தலைவா்கள் பெரம்பலூா் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ராமலிங்கம், வேளாண்துறை இணை இயக்குநா் கருணாநிதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் மா. இந்திரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT