பெரம்பலூர்

ஓய்வூதியதாரா்கள் குறைகேட்பு நாள் கூட்டம்

1st Dec 2021 02:14 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரகக் கூட்டரங்கில் ஓய்வூதியதாரா்கள் குறைகேட்பு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்தாா். சென்னை ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநா் சி. கமலநாதன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, 17 மனுக்களை அளித்தனா்.

இதில் 4 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. எஞ்சியுள்ள 13 மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் 15 தினங்களுக்குள் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஓய்வூதிய இயக்கக முதுநிலைக் கணகாணிப்பாளா் ரிச்சா்ட் பாட்ரிக், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) சுப்பையா, (கணக்குகள்) பி.எஸ். ஸ்ரீதா், ஊராட்சிகள் உதவி இயக்குநா் மு. பாரதிதாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT