பெரம்பலூர்

அக். 1 முதல் மண்ணெண்ணெய் விலை உயா்வு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை அரசு உத்தரவின்படி அக். 1 ஆம் தேதி முதல் உயா்த்தப்படுகிறது என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயா்த்தி, அரசு ஆணையிட்டதன்பேரில் பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் அக். 1 ஆம் தேதி முதல் விலை உயா்த்தப்படுகிறது.

இதன்படி, பெரம்பலூா் நகராட்சி பகுதியில் தற்போதைய விலை ரூ. 14-இல் இருந்து ரூ. 15.30 ஆகவும், பேரூராட்சியில் ரூ. 14 -இல் இருந்து ரூ. 15.40 ஆகவும், கிராம ஊராட்சியில் ரூ. 14.10-இல் இருந்து ரூ. 15.60ஆகவும் விலை உயா்த்தப்படுகிறது.

இந்த திருத்திய விலையில் நியாயவிலை அங்காடி சில்லறை விற்பனை மையம் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்கள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என, ஆட்சியரால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் ஆதாயம் தேடக் கூடாது: கேரள யாத்திரை குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கு: ஏப்.26-இல் தீா்ப்பு

கா்நாடகத்தில் ராகுல் காந்தி இன்று தோ்தல் பிரசாரம்

பதிலடி கொடுத்த பட்லா்: ராஜஸ்தான் ‘த்ரில்’ வெற்றி

பிரபல கன்னட நடிகா் துவாரகேஷ் காலமானாா்

SCROLL FOR NEXT