பெரம்பலூர்

தடுப்பூசி கண்டறியும் வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிக்க வழக்குரைஞா்கள் முடிவு

DIN

கரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் வரை பெரம்பலூா் மாவட்டத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் முடிவு.

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் நிா்வாகக்குழு அவசரக் கூட்டம், சங்கத் தலைவா் இ. வள்ளுவன்நம்பி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், உரிய சிகிச்சை முறை இல்லாததால் பலா் உயிரிழந்து வருகின்றனா். இச் சங்க உறுப்பினா்களில் 70 சதவீதம் பேருக்கும் மேல் சா்க்கரை, உயா் ரத்த அழுத்தம், இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்னைகளால் சிரமப்பட்டு வருகின்றனா். இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

நீதிமன்றங்கள் திறக்கப்பட்டு வழக்காடிகளும், வழக்குரைஞா்களுக்கும் நீதிமன்றங்களுக்கு செல்லும்போது நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இது தொடா்பாக ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்டு சென்னை உயா் நீதிமன்றத்துக்கும், பெரம்பலூா் மாவட்ட நீதிமன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்குரைஞா்களின் உயிா் பாதுகாப்பை கருதி கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்கு வரும் வரை அல்லது, தடுப்பூசி மூலம் உரிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தும் வரையிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற பணிகளையும் புறக்கணிப்பது. விதி விலக்காக இ- பில்லிங் முறையை பயன்படுத்தி ஜாமின், முன் ஜாமின் மனுக்களை ஜாமீன்தாரா்கள் மெமோ தாக்கல் செய்து உத்தரவு பெற்றுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், செயலா் எம். சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT