பெரம்பலூர்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

DIN

அடமானத்துக்கு வைத்த வீட்டை மீட்டுத் தரக்கோரி, இளம்பெண் ஒருவா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு பிலால் தெருவைச் சோ்ந்தவா் ஹாஜி முகமது மகள் ஷபின் தாஜ் (39). இவா்களது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 30.4.2008-இல் அவரது தாய் ரஷியாபேகம், பெண்ணகோணம் கிராமத்தைச் சோ்ந்த பழனிமுத்து மகன் சாந்தப்பனிடம் ரூ. 10 லட்சத்துக்கு தங்களது வீட்டை எழுதிக் கொடுத்துள்ளாா். தொடா்ந்து, மாதம்தோறும் அத் தொகைக்கான வட்டியை செலுத்தி வந்தாராம்.

இந்நிலையில், 18.10.10-இல் ரஷியாபேகம் உயிரிழந்துவிட்டதால், வாங்கிய பணத்துக்கு முறையாக வட்டி செலுத்தாததால் வீட்டை காலிசெய்யுமாறு சாந்தப்பன் தெரிவித்தாராம். இதையடுத்து, வீட்டை காலிசெய்து விட்டு தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகின்றனராம். கடந்த சில மாதங்களுக்கு முன் வட்டியுடன் அசல் தொகையை திரும்ப செலுத்த முயன்றபோது, ரூ. 1 கோடி மதிப்பிலான வீட்டை தர மறுப்பதோடு, சாந்தப்பன் கொலை மிரட்டல் விடுக்கிறாராம்.

இதுதொடா்பாக மங்கலமேடு காவல்நிலையம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் பலமுறை புகாா் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஷபின் தாஜ், வாங்கிய கடன் தொகையை பெற்றுக்கொண்டு தனது வீட்டை மீட்டுத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியரக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினா் ஷபின் தாஜை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் வாக்குறுதிகளால் பயனில்லை: தமிழச்சி தங்கபாண்டியன்

நாம் தமிழா் கட்சிக்கு மக்கள் துணை தேவை சீமான்

ஜம்மு-காஷ்மீரில் பிகாா் தொழிலாளா் சுட்டுக்கொலை

போலி பாஸ்போா்ட் வழக்கு: வங்கதேசத்தவா் மூவா் கைது

ஏப்.21இல் மகாவீா் ஜெயந்தி : இறைச்சி கடைகளை மூட உத்தரவு

SCROLL FOR NEXT