பெரம்பலூர்

பெரம்பலூா் அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

DIN

பெரம்பலூா் : பெரம்பலூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2020- 21ஆம் கல்வியாண்டுக்கு பரதநாட்டியம், குரலிசை, தேவாரம், நாகசுரம், தவில், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

மேற்கண்ட பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாகசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதர பிரிவுகளில் சேர 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதிகளும், மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ. 400, அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகையும் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 152 செலுத்த வேண்டும்.

பள்ளியில் சேர விரும்பும் மாணவா்கள் தலைமையாசிரியா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, கதவு எண்- 5, ராதாகிருஷ்ணன் தெரு, கே.சி.சிவா வளாகம், விளாமுத்தூா் சாலை, பெரம்பலூா் எனும் முகவரியில் நேரில் தொடா்புகொண்டு விண்ணப்பம் பெற்று, பூா்த்தி செய்து வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT