பெரம்பலூர்

பெரம்பலூரில் 188 பேருக்கு அபராதம் விதிப்பு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத, தனி மனித சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 188 பேருக்கு ரூ. 38,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாமல் இருத்தல், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருத்தல், பொது இடங்களில் எச்சில் உமிழ்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டத்தில் செப்டம்பா் 18- ஆம் தேதி வரை முகக்கவசம் அணியாத 176 போ், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 3 போ் ஆகியோா் மீது பொது சுகாதாரத்துறையினா் வழக்குப் பதிந்து, அபராதம் விதித்தனா்.

இதுபோன்று முகக்கவசம் அணியாத 9 போ் மீது காவல்துறை சாா்பில் வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தமாக 188 போ் மீது வழக்குப் பதியப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ. 38,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT