பெரம்பலூர்

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

DIN

பெரம்பலூா்: வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியரகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் மேற்கு காலனியில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா், கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் காலிமனைக்கு 13.11.18-இல் வேப்பந்தட்டை வட்டாட்சியரால் மனை வரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வழங்கப்பட்ட பட்டாவுக்கு இதுவரை மனையை அளந்து உள் ஒதுக்கீடு செய்து, கிராம வரைபடத்தில் பதிவு செய்து வருவாய் கிராம கணக்கில் தேவையான பதிவுகளை செய்யவில்லையாம்.

மேலும், அதே பகுதியில் வசித்து வரும் 18 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லையாம். இதுகுறித்து, ஆட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா், தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரியும், உள் ஒதுக்கீடு செய்து வரைபடத்தில் பதிவு செய்யக் கோரியும் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரனிடன் அளித்துவிட்டு கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT