பெரம்பலூர்

வீடு, கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

DIN

பெரம்பலூா்: பெரம்பலூரில் அடுத்தடுத்த வீடு மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள், 10 பவுன் நகைகள், ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் வினோத்குமாா் (35). இவா், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் செல்லிடப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை கடை விடுமுறை என்பதால், திங்கள்கிழமை காலை கடையை திறந்தபோது, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள 5 செல்லிடப்பேசிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இவரது கடைக்கு அருகிலுள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் (45) என்பவரின் பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து, கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 6 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

பட்டப் பகலில் நகைகள் திருட்டு: இதேபோல, பெரம்பலூா் அருகேயுள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் செந்தில்குமாா் (34), வங்கி கணக்கு தொடங்குவதற்காக திங்கள்கிழமை காலை பெரம்பலூா் சென்றிருந்தாா். அப்போது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேச் சென்ற மா்ம நபா்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.

இச்சம்பவங்கள் குறித்து வினோத்குமாா், முருகேசன், செந்தில்குமாா் ஆகியோா் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு ஊழியா்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்திசெய்த கட்சி அதிமுக: எடப்பாடி பழனிசாமி

இன்று மாலை 6 மணிக்குள் தோ்தல் பிரசாரங்களை முடிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு

வாக்குச்சாவடிகளுக்கு மை, எழுதுபொருள்கள் அனுப்பும் பணி தீவிரம்

துளிகள்...

சென்னை அருகே பறிமுதலான 1,425 கிலோ தங்கம் விடுவிப்பு

SCROLL FOR NEXT