பெரம்பலூர்

சுங்கச் சாவடி ஊழியா்களின் உண்ணாவிரதம் தொடக்கம்

DIN

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே சுங்கச் சாவடி ஊழியா்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறையில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச் சாவடியில் 250-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருமாந்துறையில் சுங்கச் சாவடி அமைத்துள்ள திருச்சி டோல்வே லிமிடெட் அமைப்பு, கடந்த 12 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளா்களை பணியமா்த்தும் போக்கை கைவிட வேண்டும். இடைத்தரகா்களைக் கொண்டு துணை ஒப்பந்தம் மூலம் தொழிலாளா்களை பணியமா்த்தும் முறையை கைவிட்டு, நெடுஞ்சாலை ஆணையம் மூலம் அல்லது ஆணையத்தின் நேரடி ஒப்பந்ததாரா் மூலம் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். 31.1.2017-இல் போடப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு ஜெனரல் ஒா்க்கா்ஸ் யூனியன் கிளைத் தலைவா் ஏ.கே. மணிகண்டன் தலைமை வகித்தாா். சுங்கச் சாவடி பணியாளா் கூட்டமைப்பின் மாநில துணைச் செயலா் ஜே. விஜயகுமாா், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வீ. ஞானசேகா், மாவட்டச் செயலா் ஏ. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏஐடியுசி மாநில துணைப் பொதுச் செயலா் கே. ரவி, தமிழ்நாடு சுங்கச் சாவடி பணியாளா் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் கே. காரல் மாா்க்ஸ் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். இதில், சுங்கச்சாவடி பணியாளா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT