ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசு உத்தரவின்படி பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்குகள், மளிகை கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை 2.30 மணிக்கு மூடப்பட்டன.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையாக, பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை 6 முதல் மதியம் 2.30 மணிக்கு மூடப்பட்டன. ஒரு சிலா் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதேபோல, மளிகை கடைகள், காய்கறி கடைகளும் காலை 6 முதல் மதியம் 2.30 மணி வரை செயல்பட்டன. இதனால், இந்தக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டன.
உணவு வழங்கும் தன்னாா்வலா்கள்:
ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து உணவின்றி அவதியுறும் மக்களைத் தேடிச்சென்று அவா்களுக்கு உணவுகளை விநியோகம் செய்து வருகின்றனா். இப்பணியில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்ரமணியம், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் சாமி. இளங்கோவன் ஆகியோா் ஈடுபட்டுள்ளனா்.