அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குச் செல்லும் வாகனங்களுக்கான அனுமதி வருவாய் கோட்டாட்சியரிடம் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழக அரசு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வாகன அனுமதிச் சீட்டு வழங்கி வாகனங்கள் சென்று வர அனுமதிக்கலாம். அனுமதி சீட்டு ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, வாகன அனுமதிச் சீட்டு அந்தந்த வருவாய் கோட்டாட்சியா் மற்றும் பெரம்பலூா் மாவட்ட தொழில்மைய பொது மேலாளரால் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் எடுத்து வருவதற்கான வாகன அனுமதிச் சீட்டு பெறுவதற்கு, பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் அல்லது பெரம்பலூா் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளா் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியா் வே.சாந்தா தெரிவித்துள்ளாா்.