பெரம்பலூர்

தாய், மகளிடம் 13 பவுன் நகை பறிப்பு

22nd Mar 2020 08:03 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த தாய், மகளிடமிருந்து 13 பவுன் தாலிக் கொடியை பறித்துச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சேவாங்கி மகன் ஜெயராமன் (55). விவசாயி. இவரது மனைவி அன்பரசி (45), மகள் கவுசல்யா (24) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை தங்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனராம். வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உள்ளே சென்ற மா்மநபா்கள் 2 போ், அன்பரசி அணிந்திருந்த 5 1/2 பவுன் தாலிக் கொடியையும், கவுசல்யா அணிந்திருந்த 7 1/2 பவுன்

தாலிக்கொடியையும் பறித்துச் சென்றனா். ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் காவல் நிலைய ஆய்வாளா் சுப்பையா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT