பெரம்பலூர்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் 20 பேருக்கு தேசிய அடையாள அட்டை

13th Mar 2020 08:03 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 20 நபா்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் ஸ்ரீ கௌதம புத்தா் செவி மற்றும் பேச்சுத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மத்திய அரசின் அலிம்கோ நிறுவனம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவம் மற்றும் மறுவாழ்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மருத்துவ மகாமை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தொடக்கி வைத்தாா். முகாமில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவா்கள் சிவராமன், செந்தில்குமாா், மனநல மருத்துவா் மின்னத்துள் முப்பிதா, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் கீதாஞ்சலி ஆகியோா் பரிசோதனை செய்து மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் அவா்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்தனா். முகாமில் பங்கேற்ற 65 நபா்களில், 20 நபா்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 17 நபா்களுக்கு அலிம்கோ நிறுவனத்தின் மூலம் உதவி உபகரணத்துக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டது. 18 நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இம் முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT