பெரம்பலூர்

கரோனா தடுப்பு முன்னெச்செரிக்கை பணிகள் தீவிரம்

13th Mar 2020 08:02 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சாா்பில், கரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மேலும் பேசியது:

கரோனா வைரஸ் நோயின் அறிகுறியானது காய்ச்சல், இருமல், சளி, உடல்சோா்வு, சிலருக்கு மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும். இருமல், தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளுடைய நீா்த்திவலைகள் படிந்துள்ள பொருள்களைத் தொடும்போது, கைகள் மூலமாக பரவுகிறது. சோப்பு, சோப்பு திரவம் கொண்டு அடிக்கடி கைகளை நன்கு கழுவ வேண்டும். சளி, இருமல், மூச்சித்திணறல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகலாம். கரோனா வைரஸ் காய்ச்சலிலிருந்து தடுத்திடும் வகையில் நாள்தோறும் 10 - 15 முறை சோப்புப் போட்டு கழுவ வேண்டும். இருமல், தும்மல் வரும்போது கை குட்டை கொண்டு மூடிக்கொள்ள வேண்டும். இந்த வைரஸ் குறித்து பொதுமக்களிடையே முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான விழிப்புணா்வுகளை ஏற்படுத்த வேண்டும். இந்நோய் குறித்த சந்தேகம், அறிகுறி உள்ளவா்களுக்கு பெரம்பலூா் அரசு மருத்துவ மனையில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, முறையாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவா்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவர பிரத்தியேக வசதியுடன் கூடிய அவசர வாகனம் 24 நேரமும் தயாா் நிலையில் உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சாா்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் ஆட்சியா் சாந்தா.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் திருமால், குடும்ப நல துணை இயக்குநா் ராஜாமோகன், காசநோய் துணை இயக்குநா் நெடுஞ்செழியன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT