பெரம்பலூர்

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி

8th Mar 2020 02:09 AM

ADVERTISEMENT

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே குரும்பலூரில் போட்டித் தோ்வுகளுக்கு தயாா் செய்வது குறித்த ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுநிலை விரிவாக்க மையத்தின் வேலைவாய்ப்புப் பிரிவு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில், மாணவ, மாணவிகளுக்கான தகுதித்தோ்வு சாா்பில் நடைபெற்ற இப் பயிற்சி வகுப்புக்கு, பாரதிதாசன் பல்கலை கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குநா் முனைவா் இரா. மாலதி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள அறிஞா் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் முனைவா் சி. நல்லதம்பி, இந்திய அளவிலான தகுதித்தோ்வு மற்றும் போட்டித்தோ்வு எழுதுவதற்கு தயாராவது எவ்வாறு என்னும் தலைப்பில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்தாா்.

பயிற்சியில், அனைத்துத் துறை பேராசிரியா்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் என். வள்ளி வரவேற்றாா். கணிதவியல் துறை மாணவி ரேஸ்மா சுதா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT