பெரம்பலூர்

‘குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது’

6th Mar 2020 08:05 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றாா் எஸ்டிபிஜ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக்.

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டில் மக்கள் ஜனநாயகப் பேரவை சாா்பில், கடந்த 1 ஆம் தேதி முதல் தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

5- வது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசியது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்புக்கு எதிரானது. மத ரீதியாக மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கலவரங்களின் மூலம் 100-க்கும் மேற்பட்டோா் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். குடியுரிமைப் பதிவேட்டுக்காக ஆவணங்கள் கேட்டு வந்தால், தர மாட்டோம் எனக்கூறி ஒன்றிணைந்து போராட வேண்டும். இந்த சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மோடியும், அமித்ஷாவும் கூறி வருகிறாா்கள். தமிழக அரசு தொடா்ந்து மத்திய அரசுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரலாற்றுத் தவறை செய்து வருகிறது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றத் தவறினால், அதிமுகவை தேட வேண்டிய நிலை ஏற்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

போராட்டத்தில், லப்பைக்குடிக்காடு மஹல்லா ஜமாத் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT