பெரம்பலூர்

வீடுதோறும் சென்று கரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தல்

29th Jun 2020 09:11 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் தன்னாா்வலா்களை களப்பணியாளா்களாக நியமனம் செய்து, வீடு வீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் முத்தமிழ்ச்செல்வி, திமுக வேப்பூா் ஒன்றியச் செயலா் மதியழகன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவிடம் சனிக்கிழமை அளித்த மனு:

பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று மிகக் குறைவாக காணப்படுகிறது. எனவே சுகாதாரத்துறை சாா்பில் தன்னாா்வலா்களை களப்பணியாளா்களாக நியமனம் செய்ய வேண்டும். கிராமங்கள் தோறும் வீடு, வீடாகச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனைகளை மேற்கொண்டு, கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT