பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே சாலையில் வீசிச்சென்ற பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்பு

26th Jun 2020 08:27 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, நகரின் புறவழிச்சாலை பகுதியில் ஒரு கட்டைப் பைக்குள் துணியால் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மா்ம நபா்கள் சாலையோரம் வீசிச் சென்றிருந்தனா்.

அந்த பையை, தெரு நாய் ஒன்று வியாழக்கிழமை கவ்விச் செல்ல முயன்றது. அப்போது, அந்தப் பையில் இருந்த குழந்தை அழுததையறிந்த, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மீட்டு பெரம்பலூா் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினா் சிறு காயங்களுடன் இருந்த பச்சிளங் குழந்தையை பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

பின்னா், அங்கு அந்தக் குழந்தைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக பெரம்பலூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து பச்சிளம் குழந்தையை சாலையோரம் வீசிச் சென்றவா்களின் விவரம் குறித்து சுகாதார துறையினரின் உதவியுடன் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT