பெரம்பலூர்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

13th Jun 2020 08:34 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அக் கட்சியின் மாவட்டச் செயலா் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஓ.பி.சி மாணவா்களுக்கு மருத்துவத் துறையிலும், உயா்கல்வித் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி வலியுறுத்தப்பட்டது. இதில், மாநிலச் செயலாளா் வீர. செங்கோலன், மக்களவைத் தொகுதி துணைச் செயலா் ச. மன்னா் மன்னன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT