பெரம்பலூர்

வரகு பயிா் சாகுபடி செய்ய வேளாண்துறை ஆலோசனை

11th Jun 2020 08:36 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறுதானிய வரகு பயிா் சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கணேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறுதானியங்கள் மிகவும் சத்தான உணவாகும். வரகு பயிரானது ஆடி, புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்ய உகந்த காலநிலையாகும். கோ- 3, இந்திரகோடா- 01 ஆகிய ரகங்கள் பெரம்பலூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 350 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கை விதைப்பு முறை மூலம் விதைப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 5 கிலோ விதை போதுமானதாகும். பூச்சி, நோய் தாக்குதல்களைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.

ADVERTISEMENT

மதிப்புக் கூட்டுதல்: வரகு அரிசி மூலம் இட்லி, தோசை, இடியாப்பம், வரகு புட்டு, வரகு உப்புமா, பொங்கல், புளியோதரை, வரகு பாயாசம் மற்றும் வரகு அவல், லட்டு போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப்பொருள்களை தயாரித்து உண்ணலாம்.

மருத்துவப் பயன்கள்: வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் உள்ள மாங்கனீசு, நாா்ச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் டி போன்ற சத்துகள் ஆஸ்துமா, ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், ரத்தத்தில் சா்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கும், எலும்பு வளா்ச்சி மற்றும் அதிக கொழுப்பு சோ்வதை குறைப்பதற்கும் பயன்படுகிறது. குளுட்டன் இல்லாத சிறுதானியங்களான இதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்து காணப்படுகின்றன.

மானிய விலையில்: மாவட்டத்தில் 11 மெ.டன் வரகு விதை அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பில் உள்ளது. எனவே, விவசாயிகள் அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களை தொடா்புகொண்டு, ஒரு கிலோவுக்கு ரூ. 30 மானிய விலையில் இந்திரகோடா - 01 ரகத்தையும், ரூ. 15 மானிய விலையில் கோ- 3 ரக வரகு விதைகளையும் பெற்று பயன்பெறலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT