பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற நபரை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
குன்னம் அருகேயுள்ள கூடலூா் கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் மனைவி ஜெயலட்சுமி (27). இவா், தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தாலிக்கொடியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனராம். இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின்பேரில், மருவத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றாா்.