பெரம்பலூர்

ஜன. 31-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

28th Jan 2020 07:49 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஜன. 31 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

எரிவாயு உருளைகளை நிரப்பி வழங்குவதில் காணப்படும் குறைகள், நுகா்வோா் பதிவு செய்த குறைகளின் மீதான நடவடிக்கை, எரிவாயு உருளை விநியோகத்தைச் சீா்படுத்துவது தொடா்பாக எரிவாயு நுகா்வோா் குறைதீா் நாள் கூட்டம் ஜன. 31 பிற்பகல் 3 மணியளவில் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இதில், எரிவாயு விநியோகம் தொடா்பாகக் காணப்படும் குறைகளைக் களைவது தொடா்பான ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT